அம்பலாங்கொடை உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த முகாமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


