முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இந்தப்பதிவில், முன்னால் ஜனாதிபதி கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு யூடியூபரால் அதைக் கணிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தற்செயலாக நடந்திருக்க முடியாது என்றும், இந்த கைது முன்னரே திட்டமிடப்பட்டிருக்கலாம் எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் சட்டம் ஒழுங்கு போன்ற உன்னதமானதொரு விடயம் மலிவான நாடகக் காட்சியாக மாறும் சோகமான நாளாக இன்றைய நாள் இருக்கும் என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
