நீரிழிவு நோய் பெரியவர்கள் மத்தியில் பரவலாக காணப்பட கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது இந்த நோய் சிறுவர்களிடையே பரவும் அபாயம் உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தன மருத்துவ பீடத்தின் குழந்தைகள் மருத்துவ துறையின் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.
12 வயது தொடக்கம் 16 வயதிற்க்குட்பட்ட சிறுவர்கள் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திட்க்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறுவர்களை இந்த நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.