Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை

ஏப்ரல் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது மற்றும் நீண்டகால பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இந்த விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் தொடர வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

மீனவர்களை விடுவிப்பது மற்றும் அவர்களின் படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் நாங்கள் வலியுறுத்தினோம்.” என்று இந்தியப் பிரதம் தெரிவித்திருந்தார்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து வருகிறது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 119 இந்திய மீனவர்களும் 16 மீன்பிடி படகுகளும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி,

இலங்கை அதிகாரிகள் விரைவில் 11 மீனவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் பலரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை இரு தரப்பினருக்கும் இடையில் கணிசமாக விரிவாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் இறுதியில் இரு தரப்பினரின் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், தேவையான ஒத்துழைப்புக்கு மனிதாபிமான மற்றும் பயனுள்ள அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்

முந்தைய செய்தி அகத்திக் கீரையில் இருக்கும் நன்மைகள்..!
அடுத்த செய்தி வடமராட்சி கிழக்கில் சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் ஸ்கேன் நடவடிக்கைகள் ஆரம்பம்!

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

ஜூன் 20, 2026
இலங்கை

2025ம் ஆண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

ஆகஸ்ட் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?