அகத்திக் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.
அதிலும் குறிப்பாக அகத்திக் கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.
உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
எளிதில் ஜீரண சக்தியாக கூடிய உணவாக இந்த கீரை இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் பித்தத்தை தணிக்கவும் உதவும்.
கண்பார்வையை மேம்படுத்தவும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடல் புண் சரி செய்யவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த அகத்திக் கீரையை உணவில் சேர்த்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.