தகவல் தொழில்நுட்ப வழங்கும் சேவை நிறுவனங்களுடன் இணைந்து குவாண்டம் தொழில்நுட்பங்களுக்கான (Quantum Technology) மென்பொருளை ஆறாயிரம் (6,000) கோடி ரூபா செலவில் உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் வளர்ந்துவரும் துறைகளில் பணியாற்றும் ஸ்டார்ட் அப்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட உள்ளது.
எச்.சி.எல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டம் செயற்படுத்தப்பட உள்ளன.
அணு முறைமைகள் மற்றும் அணு கடிகாரங்களில் அதிக உணர்திறன் கொண்ட காந்தபுலன்களை உருவாக்க உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.