டி 20 சர்வதேச உலகக்கிண்ண போட்டியானது ஜூன் மாதமளவில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஒவ்வொரு அணியும் விளையாடியது. இன்றைய தினம் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணியானது மோதிக் கொண்டது.
இந்நிலையில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று உலக கிண்ணத்தை இந்திய அணி தன்வசப்படுத்தியது.
இந்திய அணியின் அதிகபட்ச ஓட்டமாக 76 ஓட்டங்களை விராட் கோலி பெற்றுக் கொடுத்ததுடன் அக்சர் பட்டேல் 47 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.