நைஜீரியாவில் நடந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி தாக்குதல் சம்பவமானது நேற்றுமுன்தினம்(29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் பெண் தற்கொலை குண்டுதாரிகளால் குவோசா நகரில் திருமணங்கள்இ இறுதிச் சடங்குகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களில் குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழந்துள்ளதாக போர்னோ மாநில அவசர முகாமைத்துவ அமைப்பின் தலைவர் பார்கிண்டோ சைட் உறுதிப்படுத்தியுள்ளார்.
உட்புற உறுப்பு சேதம் முதல் மண்டை ஓடு மற்றும் மூட்டு முறிவு வரை பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.