சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதற்கமைய, இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
