மலேசியாவின் – புக்கிட் தம்பூன் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருட்களுடன் இலங்கையர் ஒருவரையும் உள்நாட்டு பிரஜைகள் இருரையும் மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பீனென்ங் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த போதே, இந்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
கைதான இரண்டு உள்ளூர் பிரஜைகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும்,இலங்கையருக்கு எதிராக குற்றப்பதிவுகள் எதுவும் இருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் இந்த குழு செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் உள்ளூர் சந்தைக்காக ஹெரோயின் தயாரித்துள்ளதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.
