அயர்லாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ளT20I தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக 21 வயது சகலதுறை இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய வயது தலைவராக இடம்பிடித்து 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார்.
அயர்லாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து T20I அணியின் வழக்கமான தலைவரான ஹெரி புரூக், தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் தலைவராக செயல்படவுள்ளதால், அவருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்க அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி இந்த தொடரில் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் (வயது 21) தலைமையில் களமிறங்க உள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வயது தலைவர் என்ற பெருமையை ஜேக்கப் பெத்தேல் பெற்றுள்ளார்.
