நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல லட்சம் பேர் பருவகாலத்தின்போது ஏற்படும் மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.
நேபாள நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.