சீனாவின் உள்மங்கோலியா பகுதியில் 10 இலட்சம் தொன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சீனாவில் 60,000 ஆண்டுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அணு மின் உற்பத்தியில் யுரேனியம், புளூட்டோனியம் தாதுக்களுக்கு அடுத்ததாக தோரியம் தாது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தோரியத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அணு மின் உற்பத்தியின்போது சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படாது.மின் உற்பத்திச் செலவும் குறையும்.
அணு மின் சக்தி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே போட்டி நிலவுகிறது. இதேவேளை சீனாவின் கோபி பாலைவனப் பகுதியில் தோரியம் அணு மின் நிலையத்தை சீன அரசாங்கம் அமைத்து வருகிறது. இந்த அணு மின் நிலையம் வரும் 2029ஆம் ஆண்டு முதல் செயற்படத் தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல பல்வேறு பகுதிகளில் தோரியம் அணு மின் நிலையங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. யுரேனியத்துடன் ஒப்பிடும்போது தோரியத்தில் இருந்து 200 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்