பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடா் பருவமழையால் 30 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பஞ்சாப் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் அவசரகாலநிலையை அறிவித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது
லாகூரிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் உப்பு மலைப் பகுதியான சக்வால், கடந்த 24 மணி நேரத்தில் 423 மி.மீ. மழையைப் பெற்றுள்ளதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணம் முழுவதும் பருவமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பஞ்சாப் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். அதையடுத்து மாகாண அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
