மட்டக்களப்பு – வாழைச்சேனை வாகனேரி சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கல்முனையிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த வேனும் பொலன்னறுவையிலிருந்து கொங்கிறீட் கல் ஏற்றி வாழைச்சேனை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


