Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு காணுமாறு சாணக்கியன் கோரிக்கை!

மார்ச் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த விடயத்தினை முழுமையாக முன்வைக்க முடியாத வகையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தமது உரையை ஆரம்பித்தவேளை குறுக்கிட்ட சபாநாயகர் இந்த விடயத்தினை சபை ஒத்திவைப்பு பிரேரணை ஊடாக முன்வைக்குமாறு கோரினார்.

இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல.நாடாளுமன்ற நடைமுறைக்கமைய இதற்கான நேரத்தினை தற்போது வழங்குவதற்கான சாத்தியம் இல்லை.

சபை ஒத்திவைப்பு பிரேரணை ஊடாக இந்த விடயத்தை முன்வையுங்கள்.

அவ்வாறு இல்லை எனில் 27/2 இன் கீழ் இந்த விடயத்தைக் கேள்வியாக முன்வைக்குமாறு சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த நிலையிலே, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களின்போது 92/2 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைப்பதற்கு ஒரு நிமிடம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கேள்விகளை முன்வைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரினார்.

இதன்படி, தமக்கான நேரத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குக் கேள்விகளைத் தொடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனச் சபையில் கோரினார்.

92/2 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைக்க முன்னர் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

முந்தைய செய்தி பெண்கள் மீதான வன்முறை தொடர்பில் நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை…..
அடுத்த செய்தி 10 இலட்​சம் தொன் தோரி​யம் கண்​டு​பிடிப்பு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் பலி- 5 இராணுவ வீரர்கள் கைது!

ஆகஸ்ட் 9, 2025
இலங்கை

நாகர்கோவிலில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

பிப்ரவரி 23, 2026
இலங்கை

வவுனியா மாவட்ட மட்ட ஊர் சுற்றும் போட்டி – 2025

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப் கல்வியன்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை மாற்ற தீர்மானம்

அக்டோபர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?