முகத்துவாரம் மீனவ துறைமுகத்துக்கருகில் நேற்று மீன்பிடிப்பதற்காக இரு மீனவர்கள் கடலுக்குச் சென்று கரைக்குத் திரும்பிய போது மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இரு மீனவர்களின் சடலங்கள் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனோரை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது மொறட்டுவை கடற்கரை பகுதியில் கரையொதுங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படகு கவிழ்ந்த இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மொறட்டுவை பகுதியில் வசித்த 39 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.