Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தண்டனைச் சட்ட திருத்தம் தொடர்பாக எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

செப்டம்பர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தண்டனைச் சட்டக்கோவை திருத்தம் சட்டமூலம் மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்குலைத்து தன்பாலின கலாசாரத்தை ஊக்குவிக்கும் சூழலை ஏற்படுத்தும். இந்த சட்டமூலத்தை அரசாங்கம் உடன் மீளப்பெற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தண்டனைச் சட்டக்கோவை திருத்தம் சட்டமூலத்தை அரசாங்கம் அவசரமாக பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டமூலம் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

கல்வி அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த சட்டமூலம் பற்றி குறிப்பிடுகையில், பாடசாலை மாணவர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தில் அவமானப்படுத்தல் என்பதற்கு முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை.

இந்த சட்டமூலத்தின் ஊடாக புதிய லிபரல்வாத கொள்கை மற்றும் தன்பாலின கலாசாரம் ஆகியவற்றை செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது.

இலங்கையின் பாரம்பரியமான குடும்ப முறைமையை இல்லாதொழிக்கவே அரசாங்கம் இவ்வாறான சட்டமூலங்களை கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் மாணவர்கள் பாடசாலைக்கு பொருத்தமற்ற ஆடையிலோ அல்லது உடலில் பச்சை குத்திக் கொண்டு வந்தாலோ ஆசிரியர்களால் அவர்களை தண்டிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

அவ்வாறு தண்டித்தால் மாணவர்கள் அதனை அவமானப்படுத்தலாக கருதி ஆசிரியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம். இந்த சட்டமூலம் சமூக கட்டமைப்பில் குறிப்பாக பாடசாலை கல்வி கட்டமைப்பில் வீண் முரண்பாடுகளை ஏற்படுத்தும்.

ஆகவே இந்த சட்டமூலத்தை அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும்.மகாநாயக்க தேரர்கள் இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்றார்.

முந்தைய செய்தி அநுர அணியை விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம் -நாமல் தெரிவிப்பு!
அடுத்த செய்தி யாழில் குருதியில் கிருமித்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாணமையில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி சென்ற மூவர் கைது

மே 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

ஜூலை 7, 2025
இலங்கை

நீடிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தம்பிலுவில் பொது மயானத்தில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?