வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுந்தரபுரம் பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் ஆகியோரால் இணைந்து இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இதேவேளை சுந்தரபுரம் பிரதான வீதி 2.5 கிலோ மீட்டர் தூரம் காபட் வீதியாக மாற்றப்படவுள்ள அதேவேளை வவுனியா லைக்கா கிராமத்தில் ஒரு கிலோமீட்டரும், மன்னங்கேணி கிராமத்தில் ஒரு கிலோமீட்டரும் மற்றும் கல்குவாரி வீதியில் 1.65km வீதியும் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
இவ் வீதிகளை புனரமைக்க மொத்தமாக 162 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
