Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம் – யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே பொருட்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பாரவூர்திகளுக்கான மேலதிக எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

குறிப்பாக, யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே பொருட்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பாரவூர்திகளுக்கான மேலதிக எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட முடிவெடுக்கப்பட்டது.

மேலும், கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் அந்தந்த அமைப்புக்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனைய தொழிற்துறையினர் பிரதேச செயலகங்கள் ஊடாக தமது கோரிக்கைகளை முன்வைத்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய அனுமதிகள் இதன் பின்னர் வழங்கப்பட்டன.

மேலும், யாழ். மாவட்ட செயலகம், வடக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசின் திணைக்களங்களால் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழான வீதிகளின் திருத்தப் பணிகள், படகுச் சேவைகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

போக்குவரத்துச் சேவைகளான பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை (சிசுசரிய), இரவு நேர சேவை (நிசுசரிய) மற்றும் தொழில்துறை சார்ந்த இடங்களுக்கான போக்குவரத்து சேவை (ஹமிசரிய) ஆகியவற்றின் நிலை குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தீர்வு காணப்படாது மாவட்டக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன.

முந்தைய செய்தி இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தமை தொடர்பில் விசாரணை
அடுத்த செய்தி மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஐ.நா பிரதிநிதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் கடவுசீட்டு கட்டணங்கள் மார்ச் 31 முதல் 2.7% உயர்வு!

பிப்ரவரி 28, 2026
இலங்கை

யாழ் . பல்கலை மாணவர்களின் கறுப்பு பிரகடனம்.

பிப்ரவரி 4, 2025
இலங்கை

வலி. வடக்கு சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு நியமனம்

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி

பிப்ரவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?