Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்

பிப்ரவரி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிபுள் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றயதினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கிவுள் ஓயாத்திட்டம் தமிழ்மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்றயதினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டத்தின் விளைவாகஎனக்கு இன்று அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அந்வகையில் இன்றையதினம் வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேசசெயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் நான் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன்.

அந்தகூட்டத்தில் எனக்கு வழமையாக ஒதுக்கப்படும் இடத்தில் அமர்வதற்கு நான் சென்றபோது அங்கு அமர வேண்டாம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது. இதுவே நடைமுறை என கூறினார். வழமையாக கூட்டம் இடம்பெறும் போது எனக்கு வழங்கப்பட்டு வந்த இடத்திலேயே நான் அமரச்சென்றேன்.

அத்துடன் கூட்டம் ஆரம்பிக்க முன்னரே தமிழ்மொழி பெயர்ப்பு தேவை என்பதை பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

எனவே என்னை அவமதிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்ப்பாட்டை மேற்கொள்கிறீர்கள் என ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

மக்களின் பிரச்சனைகளை அறிவதற்காக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோதும் மக்கள் பிரதிநிதி என்று பாராமல் அவர்கள் அவமதித்துள்ளனர். இதனால் இக்கூட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டேன்.

இது ஒரு அநீதியான பழிவாங்கும் செயற்ப்பாடு நாங்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். எமக்கு இந்த கதிரை முக்கியம் அல்ல. நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவே எனக்கான இருப்பிடம் மறுக்கப்பட்டதற்கான காரணமாக உள்ளது.

ஆனால் என்ன நடந்தாலும் கிபுள் ஒயாத்திட்டம் நிறுத்தப்படும் வரை எமது குரல்கள் ஓங்கி ஒலிக்கும். எங்களது எதிர்ப்பை தொடர்ச்சியாகவே நாங்கள் காட்டுவோம். எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்றார்.

முந்தைய செய்தி புதுக்குடியிருப்பில் வெகனார் வாகனத்தில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது
அடுத்த செய்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகைக்கு குரல் கொடுக்க வேண்டும் – என்.எம்.ஆலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பாண்டியன் என்ற பெயரில் பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நாட்டல்

ஜனவரி 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆதார வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

நவம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் திருத்தப்பட்ட வேதனம்!

மார்ச் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?