கனடா இராணுவத்தில் வெறுப்புணர்வு மற்றும் இனவெறி தொடர்பான புகார்கள், கடந்த ஆண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக குறைந்து வந்த இத்தகைய சம்பவங்கள், திடீரென அதிகரித்துள்ளது இராணுவ அதிகாரிகளையும், நிபுணர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
வெறுப்புணர்வு நடத்தை சம்பவம் குறித்த கண்காணிப்பை மேற்கொள்ளும் அமைப்பில் (HCITS) 2024 ஆம் ஆண்டில், இது சார்ந்த 54 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 28 சம்பவங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.
இந்த அதிகரிப்பு, வெறுப்புப் பேச்சு, வன்முறைப் பிரச்சாரம், அச்சுறுத்தல்கள் போன்ற பல பிரிவுகளில் காணப்பட்டுள்ளது.
கனடா இராணுவத்தின் தளபதி லெப்டினன்ட்-ஜெனரல் மைக் ரைட், இந்தச் சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
