அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஏற்றுமதிகள் மீது விதித்த வரிகளையடுத்து, அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை இந்தியா நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னதாக திட்டமிட்டிருந்த தனது அமெரிக்க விஜயத்தை இரத்து செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
