அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் காரணமாக, கனடியர்கள் சுற்றுலா செல்வதற்காக அமெரிக்காவைத் தவிர்த்து, மற்ற உலக நாடுகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த புதிய போக்கு, கனடிய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.
Flight Centre Canada நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, மே 1 முதல் ஜூலை 30 வரையிலான காலத்தில், கனடியர்களின் பயணச் செலவுகள் பல நாடுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜப்பானின் சுற்றுலா நிறுவனம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,35,400 கனடியர்கள் ஜப்பானுக்கு வருகை தந்ததாகக் கூறியுள்ளது
இது கடந்த ஆண்டை விட, இது 23 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
