கொழும்பு சென் பெனடிக்ட் கல்லூரியின் இரண்டாம் தர மாணவரான தினேஷ் ஹெதாவ், 50 மீற்றர் நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனையானது 49 வினாடிகளில் 50 மீற்றர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து நிகழ்த்தப்பட்டது.
மேலும், இந்த சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம்” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது
