தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பில், கனேடிய பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான மார்க் கார்னி உறுதியளிக்கிறார்.
தற்போது திறனற்ற நிலையில் உள்ள இந்த அரச அமைப்பின் குறைபாடுகளை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பொதுப்படையான பொறுப்புக்கூறலுக்காக உருவாக்கப்பட்ட தற்போதைய அமைப்பு, அதிகப்படியான தாமதங்கள் மற்றும் திருத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் தமது தரப்பு, மக்கள் ஆணையைப் பெற்று வெல்லும் போது, கனடாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்த முடியுமென மார்க் கார்னி கூறியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசாங்க ஆவணங்களைக் குறைந்த கட்டணத்தில் கோர கனடியர்களுக்கு உரிமை அளிக்கிறது.
தகவல் கோரி விண்ணப்பித்தவருக்கு 30 நாட்களில் தகவல் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டாலும் அது அரிதாகவே பின்பற்றப்படுகிறது.
இதேவேளை, பிற கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் என்டிபி ஆகியவையும் இந்த தகவல் அறியும் சட்டத்தின் அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கக் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.