கடந்த நிதியாண்டிற்கான கியூபெக்கின் பற்றாக்குறை ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட $11-பில்லியன் அளவை எட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது, மேலும் இன்று சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் குறித்த அளவை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் செலவினங்களைக் கட்டுப்படுத்த போராடும் நேரத்தில் புதிய நடவடிக்கைகள் செலவுகளை அதிகரிக்கும்.எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, கியூபெக் $11 பில்லியன் பற்றாக்குறையுடன் ஒரு பட்ஜெட்டை முன்வைத்தது – இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும் என அதன்போது கிரார்ட் தெரிவித்திருந்தார்.
இதேவேளை பட்ஜெட்டுக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கடந்த நிதியாண்டிற்கான பற்றாக்குறை உண்மையில் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாக இருக்கும் என்று தெரிவித்தார்
“நாங்கள் 2024 ஆம் ஆண்டை நல்ல நிலையில் முடித்தோம், நிதி நிலை சிறப்பாக உள்ளது, வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது,” என்று அவர் தெரிவித்தார் , ஆனால் “2025-2026 ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறை 2024-25 ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறையை விட அதிகமாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்
பட்ஜெட் சிக்கலானது எனவும் சவாலான நேரத்தில் வருவதாகவும், 2025 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும் என்பதைக் குறிப்பிடுவது கடினம் என்றும் ஜிரார்ட் தெரிவித்துள்ளார்.
அந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பொது சேவைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், சீரான பட்ஜெட்டுக்குத் திரும்புவதற்கான திட்டத்தை முன்வைக்கும் என்றும் ஜிரார்ட் கூறினார்.
