கியூபெக்கின் வால்-டேவிட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ஒரு நூற்றாண்டு பழமையான ஹோட்டல் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
லாரன்ஷியன் பிராந்தியத்தில் அமைந்திருந்த ஹோட்டல் டி லா சப்பினேர் (Hôtel de la Sapinière) என்ற கைவிடப்பட்ட ஹோட்டலே இவ்வாறு தீயினால் பெருமளவில் அழிவடைந்துள்ளது.
தீ விபத்தையடுத்து, கட்டிடத்தின் கல் சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், இந்தச் சம்பவம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படுகிறது.
குறித்த ஹோட்டல் கடந்த சில ஆண்டுகளாக சட்டப் போராட்டம் ஒன்றின் மையப்பகுதியாக இருந்து வந்த நிலையில், தற்போது தீ விபத்தில் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
