மொன்றியல் மற்றும் மொன்டேரியி (Montérégie) உள்ளிட்ட கியூபெக்கின் தென்மேற்குப் பகுதிகளுக்குச் சுற்றுச்சூழல் திணைக்களம் மழை வீழ்ச்சி தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான வானிலை காரணமாக அப்பகுதிகளில் 40 முதல் 60 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாழ்வழு்த மண்டலத்துடன் தொடர்புடைய நிலைபெற்ற வெப்ப வளிமுகம் (warm front) காரணமாக இப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாகச் சுற்றுச்சூழல் திணைக்களம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்தக் கனமழை காரணமாகச் சாலைகளில் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கக்கூடும் எனவும், சில வேளைகளில் திடீரெனப் பார்வைத் திறன் (visibility) குறைய வாய்ப்புள்ளதாகவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சியால் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் போதே இவ்வாறான மழை எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
