மொன்றியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வானிலை மிதமானதாக காணப்படும் என Environment Canada தெரிவித்துள்ளது.
Montréal-Trudeau சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் சுமார் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.இன்று பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இரவு நேரத்தில் வெப்பநிலை சுமார் 15 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, நாளை ஒக்டோபர் முதலாம் திகதி மொன்றியலில் வெப்பநிலை மேலும் அதிகரித்து 26 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாளை இரவு முதல் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன், ஒக்டோபர் 2ஆம் திகதி மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒக்டோபர் 3ஆம் திகதி மீண்டும் வெயிலான வானிலை காணப்படலாம் என Environment Canada-வின் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
மொன்றியலில் இன்று காற்றுத்தரம் பொதுவாக நல்ல நிலையில் காணப்படுவதாக தற்போதைய கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொன்றியலின் பல்வேறு கண்காணிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகளின்படி, PM2.5 எனப்படும் நுண்ணிய காற்றுத் துகள்களின் அளவு குறைந்த மட்டத்தில் பதிவாகியுள்ளது.
காற்றுத் தரக் குறியீட்டின் அடிப்படையில், தற்போதைய நிலை பொதுமக்களின் வழக்கமான வெளிப்புற நடவடிக்கைகளுக்கு சாதகமானதாக காணப்படுகிறது.
இன்றைய தினத்தில் மொன்றியலில் வெப்பநிலை மிதமாக காணப்படுவதுடன், காற்றின் வேகமும் பெரிய அளவில் அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், காற்றுத் தர நிலை நேரத்துக்கு நேரம் மற்றும் நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடியதால், குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள் உள்ளூர் காற்றுத் தரக் கண்காணிப்பு தகவல்களை தொடர்ந்து அவதானிப்பது அவசியமாகும்.
