Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சில விடயங்களை வேறுவிதமாக செய்திருக்க வேண்டும்’ – கிறிஸ்டின் பிரஷெட்

அக்டோபர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Quebec Premier Christine Frechette speaks at the Coalition Avenir Quebec general council meeting held in Levis, Que., Saturday, May 23, 2026. THE CANADIAN PRESS/Karoline Boucher
SHARE

கியூபெக் மாகாணச் சட்டசபைத் தேர்தலுக்காக 39 நாட்கள் நீடித்த பிரசார காலத்தின்போது தாம் சில விடயங்களை வேறுவிதமாகச் செய்திருக்க வேண்டும் என, ஆளும் ‘கூட்டணி அவெனீர் கியூபெக்’ (CAQ) கட்சியின் தலைவரும் மாகாண முதல்வருமான கிறிஸ்டின் பிரஷெட் தெரிவித்துள்ளார்.

ஷாவினிகன் நகரில் நடைபெற்ற பிரசார நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா‘ (PQ) வெற்றிபெற்றால் கியூபெக் மாகாணத்தை தனிநாடாக்குவது தொடர்பான பொதுவாக்கெடுப்பை நடத்தும் என உறுதியளித்துள்ளது எனவும் இந்த வாக்கெடுப்பினால் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து, தாம் பிரசாரத்தின்போது போதுமான அளவு முக்கியத்துவம் கொடுத்துப் பேசத் தவறிவிட்டதாகவும் கிறிஸ்டின் பிரஷெட் வருத்தம் வெளியிட்டார்.

பொதுவாக்கெடுப்பு குறித்த அச்சம் உடனடியாக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் எனக் குறிப்பிட்ட அவர், கியூபெக் மக்கள் இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, தமது கட்சியின் வாக்குறுதிகளைப் பற்றி விரிவாக விளக்குவதில் அதிக நேரம் செலவிட்டதாகவும், எதிர்க்கட்சிகளுடனான முக்கிய வேறுபாடுகளை மக்களிடம் தெளிவாகக் கொண்டுசேர்க்கவில்லை என்றும் கிறிஸ்டின் பிரஷெட் சுட்டிக்காட்டினார்.

மேலும், தொலைக்காட்சி விவாதங்களின்போது எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களுக்குத் தாம் அளவுக்கு அதிகமாகப் பதிலடி கொடுக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவினங்களைக் குறைத்தல், பொதுச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் கியூபெக்கின் பொருளாதாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பிரஷெட் தமது இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்dஇருந்தமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் தேர்தல் – இறுதிக்கட்டப் பிரசாரத்தை நிறைவு செய்த கட்சித் தலைவர்கள்
அடுத்த செய்தி அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ள நார்த் ஷோர் மக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் தற்காலிகப் பணியாளர்களுக்கு மட்டும் நிரந்தர வதிவிட உரிமை (PR) வழங்க தீர்மானம்

மார்ச் 16, 2026
கியூபெக்

மீண்டும் எழுச்சி பெற்று வரும் கியூபெக் லிபரல் கட்சி

மார்ச் 16, 2026
கியூபெக்

பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது

செப்டம்பர் 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் தேர்தல் – இறுதிக்கட்டத்தில் Parti Québécois கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு

அக்டோபர் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?