கியூபெக் மாகாணச் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில், மாகாணத்தின் வடகிழக்கு நார்த் ஷோர் (North Shore) பிராந்திய வாக்காளர்கள் சுகாதாரம், ஆங்கில மொழி உரிமைகள் மற்றும் வீட்டு வசதி போன்ற அடிப்படைச் சிக்கல்களுக்கான தீர்வுகளுக்கே தாம் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல், மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குக் தொலைநோக்குத் தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கியூபெக்கில் நிலவும் கடுமையான மொழிச் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, தங்களை இரண்டாம்தரக் குடிமக்களாக உணர்வதாக நார்த் ஷோர் பகுதியில் வாழும் ஆங்கிலம் பேசும் சிறுபான்மை மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஃபிரெஞ்சு மொழியையும் அதன் கலாசாரத்தையும் பாதுகாப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், அதேவேளை தங்களது வரலாற்று உரிமைகளும் ஆங்கில மொழியும் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மொழி தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதால், இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மாகாணத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

