கியூபெக் மாகாணத்தில் உள்ள வால்-டெஸ்-மாண்ட்ஸ் (Val-des-Monts) பகுதியில் அமைந்துள்ள நக்கர்தோக் (Nakkertok) பனிச்சறுக்கு மையத்தில், இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்தமை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பனிச்சறுக்கு மையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்த சிறுமி தற்போது ஒட்டாவாவில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ தினத்தன்று காலை, ஒரு பெரியவர் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டே, அச்சிறுமியை ஒரு சிறிய பனிச்சறுக்கு வண்டியில் (Sled) வைத்து இழுத்துச் சென்றுள்ளார்.
ஒரு குன்றிலிருந்து கீழே இறங்கும்போது, எதிர்பாராதவிதமாக அந்தப் பெரியவர் நிலைதடுமாறி அந்த சிறுமியின் மீது விழுந்துள்ளார்.
இதன் காரணமாக அந்த சிறுமிக்குத் தீவிரமான காயம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திலேயே சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைகளை (CPR) அளித்தமை குறிப்பிடத்தக்கது.
