வசந்த காலத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த மொன்றியல் நகரின் வெப்பநிலை இன்று திடீரென ஆகக் குறைந்ததால், மக்கள் மீண்டும் குளிர்கால உடைகளை அணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை உறைபனி மற்றும் லேசான பனித்தூறல் நகரின் சில பகுதிகளில் காணப்பட்டது.காற்றுடன் கூடிய குளிரால் வெப்பநிலை -5 செல்சியஸ் ஆக உணரப்பட்டது.
இந்நிலையில், மொன்றியல் நகரில் ஏற்கனவே பூக்கத் தொடங்கியுள்ள டுலிப் (Tulip) உள்ளிட்ட வசந்த கால மலர்களை உறைபனியிலிருந்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தோட்டக்கலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல், மழையுடன் கூடிய வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
