கியூபெக் மாகாணத்தின் லவால் நகர பொதுப் போக்குவரத்து நிறுவனமான STL (Société de transport de Laval), போதிய பராமரிப்பு உதிரிப்பாகங்கள்
இல்லாத காரணத்தினால் நாளொன்றுக்கு சுமார் 60 பேருந்துப் பயணங்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தத் திடீர் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சேவை குறைப்பினால் தினமும் சுமார் 2,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, காலை நேர நெரிசலில் 39 பயணங்களும், மாலை நேரத்தில் 23 பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தற்காலிக முடக்கம் அடுத்த 4 முதல் 8 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
