கியூபெக் மாகாணத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், Parti Québécois – PQ கட்சியின் தலைவர் Paul St-Pierre Plamondon மற்ற கட்சிகளை விட முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான இந்த தேர்தல் பிரசாரத்தில், பொருளாதார நிச்சயமற்ற நிலை, வாழ்க்கைச் செலவு மற்றும் கியூபெக் sovereignty தொடர்பான மூன்றாவது referendum நடத்தப்படக்கூடிய நிலை ஆகியவை முக்கிய விவாதங்களாக இடம்பெற்றுள்ளன.
PQ தலைவர் Paul St-Pierre Plamondon, தேர்தல் முடிவை முன்கூட்டியே உறுதியாகக் கருதவில்லை என தெரிவித்துள்ளதுடன், தனது கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் வெற்றி கிடைத்தால், 1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Parti Québécois கட்சி 2022ஆம் ஆண்டு வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், அது குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும்.
இதனிடையே, Université du Québec à Montréal அரசியல் அறிவியல் பேராசிரியர் André Lamoureux, PQ-வுக்கான சமீபத்திய ஆதரவு அதிகரிப்பு, Coalition Avenir Québec – CAQ கட்சியின் ஆதரவு குறைந்ததன் பின்னணியில் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
CAQ தலைவர் Christine Fréchette, அமெரிக்கர்கள் Quebec sovereignty ஆதரவாளர்கள் மாகாணத்தின் கட்டுப்பாட்டைப் பெற உதவ முயற்சிக்கின்றனர் என தெரிவித்திருந்தார். பின்னர் அந்தக் கருத்தை அவர் திரும்பப் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

