Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

தேர்தலில் வெற்றிபெற்றால், மாகாணத் துணை நிலை ஆளுநர் பதவியை ஒழித்து விடப்போவதாக, பார்ட்டி கியூபெக்வா அறிவிப்பு.

அக்டோபர் 1, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றினால், பிரித்தானிய முடியாட்சியின் பிரதிநிதியான மாகாணத் துணை நிலை ஆளுநர் (Lieutenant-Governor) பதவியை முற்றாக ஒழித்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என பார்ட்டி
கியூபெக்வா கட்சி அறிவித்துள்ளது.

போல் செயிண்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon) மாகாணத் துணை நிலை ஆளுநர் (Lieutenant-Governor) பதவியை இல்லாதொழிப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள கியூபெக் மாகாணத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், மாகாணத் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்படும் அரச நிதியை முழுமையாக நிறுத்தி, அந்த நிதியை வீடற்ற மக்களின் நலத்திட்டங்களுக்குப்  பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

கனடிய அரசியலமைப்பின் கீழ் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது சட்டரீதியான சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்ற விமர்சனங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த பார்ட்டி கியூபெக்வா கட்சித் தலைவர் பிளமொண்டன், தங்களது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் கியூபெக்கில் பிரித்தானிய முடியாட்சியின் அதிகாரத்தை ஒழிப்பதற்கான சிறப்புச் சட்டமூலமொன்றைச் சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

"பிரித்தானியாவின் வரலாற்றுப் பேரரசின் ஆட்சியின்கீழ் நாம் அடிமைகளாக இருந்தோம் என்பதை நினைவூட்டுவதற்காக கியூபெக் மக்கள் தமது வரிப்பணத்தை வீணடிக்க விரும்பவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

”வரலாற்று ரீதியான இந்தத் தேவையில்லாத அமைப்பைப் பராமரிப்பதற்குப் பதிலாக, சமூகத்தின் அவசியத் தேவைகளுக்கு நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என பிளமொண்டன் சுட்டிக்காட்டினார்.

பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் கடந்த சில ஆண்டுகளாகவே கியூபெக் அரசியலில் பிரித்தானிய முடியாட்சியின் ஆதிக்கத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர்,
தேர்ந்தெடுக்கப்பட்ட கியூபெக் மக்கள் பிரதிநிதிகள் மன்னர் மூன்றாம் சார்ள்ஸுக்கு விசுவாசப் பிரமாணம் எடுக்கும் கட்டாய நடைமுறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தைக் கொண்டுவருவதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

அந்த சட்டமூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதற்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் தற்போது கியூபெக் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி மொன்றியலில் இன்று செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் Samuel De Champlain Bridge!
அடுத்த செய்தி கைது செய்வதை தடுக்க கோரிய கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு நிராகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மார்ட்டின் சாரெஸ்ட்டால் வழங்கப்பட்ட வாக்குமூலம்

செப்டம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிவிப்பு!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

போர்த்துக்கல் ரயில் தடம் புரண்டதில் 16 பேர் உயிரிழப்பு

செப்டம்பர் 5, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வழக்கறிஞர்கள்

செப்டம்பர் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?