உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், தம்மை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு தொடர்பான விசாரணையை முன்னெடுக்காமலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த ரிட் மனுவை நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தம்மை கைது செய்யக்கூடும் எனக் கூறியே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், கைது செய்யப்பட்டால் தம்மை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் நடவடிக்கையைத் தடுக்குமாறு நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் இந்த சட்ட நடவடிக்கையும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

