அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) “தனித்துவமான கூட்டணி” (Unique Alliance) ஒன்றை உருவாக்குவது குறித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாகக் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான உறுப்பினராக இணைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காகப் பிரதமர் மார்க் கார்னி செல்லவுள்ள நிலையிலேயே இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ரொபெர்ட்டா மெட்சோலாவின் (Roberta Metsola) அழைப்பை ஏற்றுப் பிரதமர் கார்னி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நாட்டில், கனடா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடும் நடைபெறவுள்ளது
இது தொடர்பாகக் கனடாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் ஜெனிவீவ் டட்ஸ் (Geneviève Tuts) கருத்துத் தெரிவிக்கையில், ”இரு தரப்பிற்கும் இடையிலான உறவை வெறுமனே புதிய கூட்டாண்மையாக இல்லாமல், முற்றிலும் புதிய மற்றும் தனித்துவமான முறையில் “மறுசீரமைக்க” (Reimagine) விரும்புவதாக” குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அண்மைக்கால வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், கனடா – ஐரோப்பிய ஒன்றிய உறவை மேலும் வலுப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும் ஜெனிவீவ் டட்ஸ் (Geneviève Tuts) சுட்டிக்காட்டியுள்ளார்.

