Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய கனடா

ஆகஸ்ட் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத சுங்கவரி உயர்வால் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) முடிவுக்குக் கனடிய மக்களும் தொழில் முனைவோரும் பரவலான ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் முன்வைத்த “ஏற்றுக்கொள்ள முடியாத” நிபந்தனைகள் காரணமாக, கனடாவின் பேச்சுவார்த்தைக் குழுவை ‘நாடு திரும்புமாறு பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத புதிய சுங்கவரியை உடனடியாக அமல்படுத்தியது.

அமெரிக்காவின் இந்த முடிவுக்குப் பதிலடியாக, செப்டம்பர் மாதம் உழைப்பாளர் தினத்திற்குப் (Labour Day) பிந்தைய செவ்வாய் முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது ‘டொலருக்கு டொலர்‘ என்ற அடிப்படையில் ’பதில் சுங்கவரி’ விதிக்கப்படும் என்று கனடாவின் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், உள்நாட்டு uஉடகமொன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் மற்றும் பொதுமக்களின் எதிர்வினைகளின் படி, பெரும்பான்மையான கனடியர்கள் பிரதமர் காரினியின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

“அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகளுக்குப் பணிந்து ஒரு மோசமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை விட, பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதே சரியானது” எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த வரிப் போரினால் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரும் என 89 சதவீத கனடியர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், சுமார் 38 சதவீதமானோர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் கூர்மையான ஆயுதத்தால் நபரொருவரை தாக்கியமை தொடர்பான விசாரணைகள் முடுக்கம்
அடுத்த செய்தி வர்த்தக உடன்படிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

ஜூலை 15, 2026
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூடு விவகாரம் – உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி அஞ்சலி

பிப்ரவரி 14, 2026
கனடா

பில்லி பிஷப் தீவு விமான நிலைய விரிவாக்க விவகாரம்

மே 20, 2026
கனடாமுதன்மை செய்தி

சாரதி எரிக் ரவுகுத் கார் விபத்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜூன் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?