மொண்ட்ரியலில் உள்ள கோட்-டெஸ்-நைஜஸ்-நோத்ரே-டாம்-டி-கிராஸ் (Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce) பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தாக்கப்பட்ட நபர் உயிருக்குப் போராடும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் 49 வயதான நபர் ஒருவரை பொலிஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
தாக்குதலில் அந்த நபரின் பங்களிப்பு மற்றும் பின்னணி குறித்தும், அவரிடம் பொலிஸ் புலனாய்வாளர்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான சரியான காரணம் அல்லது எந்த மாதிரியான சூழ்நிலையில் இந்த மோதல் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என மொண்ட்ரியல் பொலிஸ் பேச்சாளர் மானுவல் குடூர் (Manuel Couture) தெரிவித்துள்ளார்.

