மொன்றியலில் நிலவி வந்த இதமான கோடைகால வெப்பம் இந்த வாரத்துடன் முடிவுக்கு வந்து, மீண்டும் மழையுடனான குளிரான வானிலை ஆரம்பமாகவுள்ளதாக வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் மொன்றியலில் சுமார் 23°C வரை வெப்பம் நிலவிய போதிலும், நாளை புதன்கிழமை முதல் வானிலை மாறவுள்ளது. எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் நேர வெப்பம் 8°C முதல் 9°C வரை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இரவு நேரங்களில் வெப்பநிலை உறையும் நிலைக்கு செல்லக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வழமையாக ஏப்ரல் மாதத்தில் பெய்யும் 70 மி.மீ மழைவீழ்ச்சியை விட, இந்த ஆண்டு ஏற்கனவே 20 மி.மீ அதிக மழை பதிவாகியுள்ளது.
இந்த வார இறுதிக்குள் பெய்யவுள்ள மேலதிக மழையினால், இந்த ஏப்ரல் மாதம் வரலாற்றில் அதிக மழைவீழ்ச்சி கொண்ட மாதங்களில் ஒன்றாக அமையலாம் என காலநிலை ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
