Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பதவியை இராஜினாமா செய்யும் கியூபெக் மாநில பிரதிநிதி அலெக்சாண்டர் பூலரிஸ்

ஏப்ரல் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

என்.டி.பி (NDP) கட்சியின் கியூபெக் மாநிலத்திற்கான ஒரே பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருந்த அலெக்சாண்டர் பூலரிஸ் (Alexandre Boulerice), தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலில் பங்கேற்கவுள்ளார்.

நேற்று காலை மொன்றியலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தாம் என்.டி.பி கட்சியிலிருந்து விலகி கியூபெக் சொலிடயர் (Québec Solidaire) கட்சியில் இணையவுள்ளதாக பூலரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

எதிர்வரும் உக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கியூபெக் மாநிலப் பொதுத்தேர்தலில், மொன்றியலின் கூயின் (Gouin) தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசியலில் பணியாற்றிய பூலரிஸ், தற்போது கியூபெக் மாகாணம் எதிர்கொண்டுள்ள வீடமைப்பு நெருக்கடி, சுகாதாரம் மற்றும் கல்விச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, மாகாண அரசியலில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்தார்.

கியூபெக் தற்போது நலமாக இல்லை, அதனைச் சீர்செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார். கியூபெக்கின் தனித்துவத்தைப் பேணும் கொள்கை உடைய கியூபெக் சொலிடயர் கட்சியில் இணைவதை அவர் ஒரு தாய்வீட்டிற்குத் திரும்புதல் (Homecoming) என வர்ணித்தார்.

இதன் மூலம் கியூபெக் மாநிலத்தில் என்.டி.பி கட்சிக்கு இருந்த ஒரே நாடாளுமன்றப் பிரதிநிதியும் இல்லாமல் போயுள்ளார். அலெக்சாண்டர் பூலரிஸின் இந்த வெளியேற்றம் மத்திய என்.டி.பி கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தற்போது நாடாளுமன்றத்தில் என்.டி.பி கட்சியின் பலம் 5 இடங்களாகக் குறைந்துள்ளதுடன், ஒன்ராறியோவுக்கு கிழக்கே அந்தக் கட்சிக்கு எவ்வித பிரதிநிதித்துவமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட்டை சந்தித்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர்
அடுத்த செய்தி மொன்றியலில் மீண்டும் மழையுடனான குளிரான வானிலை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஸ்டார்பக்ஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

அக்டோபர் 3, 2025
கியூபெக்

மொன்ட்ரியலில் பத்திரமாக மீட்கப்பட்ட  சிறுமி

நவம்பர் 20, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பனிப்பொழிவோடு ஆரம்பித்த கிறிஸ்துமஸ் பண்டிகை!

டிசம்பர் 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

காலவரையற்று மூடப்பட்டுள்ள கியூபெக்கின் ஆர்தர்-லாபெர்ஜ் பாலம்

மார்ச் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?