Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான பீட்டர் நைகார்ட் மீதான விசாரணை ஆரம்பம்

ஜூலை 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனமான ‘நைகார்ட் இன்டர்நேஷனல்’ (Nygard International) அமைப்பின் நிறுவனரும், முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணருமான பீட்டர் நைகார்ட் (Peter Nygard) மீதான புதிய நீதிமன்ற விசாரணை, மொன்றியல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோதமாகக் சிறைப்பிடித்தல் முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

தனது ஆடை வடிவமைப்புத் துறை அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெண்களையும் இளம் பெண்களையும் ஏமாற்றிப் பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்தியதாக, தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பீட்டர் நைகார்ட் தொடர்ச்சியாக மறுத்து வருகிறார்.

கியூபெக் மாகாண அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் (Quebec prosecutors), கடந்த 2022 ஆம் ஆண்டில் இவருக்கு எதிராக ஒரு பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு சட்டவிரோத சிறைப்பிடித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதிக்கும் 1998 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மொன்றியலில் இடம்பெற்றதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில், டொராண்டோ நீதிமன்றத்தின் நடுவர் மன்றத்தினால் (Jury) நான்கு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளில் பீட்டர் நைகார்ட் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.

அதனடிப்படையில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தற்போது சிறைவாசத்தை அநுபவித்து வருகின்ற நிலையில், மொன்றியல் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில், அவருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மொன்றியலில் தற்போது ஆரம்பமாகியுள்ள இந்த வழக்கிற்கும், ஏற்கனவே டொராண்டோ நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்புமில்லை என, நீதிமன்ற வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

முந்தைய செய்தி கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்
அடுத்த செய்தி யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறக்க விடப்பட்ட ட்ரோன் – ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் பலத்த மழையுடன் பனிப்பொழிவு!

மார்ச் 30, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஸ்டார்பக்ஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

அக்டோபர் 3, 2025
கியூபெக்

கியூபெக்கில் சூறாவளி பாதிப்பு – 1,500 ஊழியர்கள் களத்தில் அர்ப்பணிப்பு

மார்ச் 19, 2026
கியூபெக்

புதிய மாற்றத்தை விரும்பிய மொன்றியல் மக்கள்!

நவம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?