Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

செப்டம்பர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டம் தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டம் மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை பயன்பாடு மற்றும் நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெருமளவில் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவக் குடியிருப்புகள் முன்மொழியப்பட்ட பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ளன.

இங்கு மிகப்பெரிய நிர்வாக வளாகம் அமைக்கப்படுவதால் 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவர்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதாரத் தொழில்கள் முடங்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், அதிஉயர் பாதுகாப்பு கொண்ட தலைமைச் செயலகம் அமைவதன் மூலம், பொதுமக்களுக்குச் சொந்தமான கடற்கரைப் பகுதி கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.

புயல், கடல் மட்ட உயர்வு மற்றும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் சூழலியல் பகுதியாக இது உள்ளதால், காலநிலை அவசரநிலை நிலவும் சூழலில் இங்கு தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்திற்கு நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவை என்றபோதிலும், கடலோரப் பகுதியை ஆக்கிரமித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், அரசு பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று இடங்களைப் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்ற அனுமதி
அடுத்த செய்தி An Ordinary Man திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவின் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி

மே 30, 2025
இந்தியா

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி

செப்டம்பர் 6, 2026
இந்தியாவிசேட செய்திகள்

விழிஞ்சம் துறைமுகம், பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று இந்தியப் பிரதமர் நம்பிக்கை தெரிவிப்பு!

மே 2, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது

ஜூலை 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?