நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ (An Ordinary Man) திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
நடிகர் ரவி மோகன் இப்படத்தை இயக்கி, தயாரித்தும் வருகின்றார்.
கெனிஷா பிரான்சிஸ், இத்திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘ஹையர்’ (Higher) பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ரவி மோகன் மற்றும் யங் ராஜா இணைந்து எழுதியுள்ள இப்பாடலை, யங் ராஜா மற்றும் ரஞ்சித் ஆகியோர் பாடியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புரமோ முன்னதாக வெளியாகியிருந்த நிலையில், பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

