அண்மையில் அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை சம்பவத்தில் மாமியார் சித்ராதேவி இன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
தற்கொலை செய்வதற்கு முன் ரிதன்யா கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டி வட்ஸ்அப் குரல் பதிவொன்றை தன் தந்தை அண்ணாதுரைக்கு அனுப்பியது பலரையும் உலுக்கியது.
இந்நிலையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேவூர் பொலிஸார் வழக்கு பதிந்தனர்.
இதில் கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டனர்.சித்ராதேவி உடல்நிலையை காரணம் காட்டி கைது செய்யப்படவில்லை.
குறித்த வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதால் கைது செய்யப்படவில்லை என, ரிதன்யாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இன்று ( 4) ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டார்.
மேலும் ரிதன்யா தற்கொலை தொடர்பாக மூவரையும் பொலிஸார் விசாரணைக்கு எடுத்து விசாரிக்க வேண்டும் என ரிதன்யா குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில், மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.