இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காரைநகர் – களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் லான்ட்மாஸ்டரும் கடந்த 1ஆம் திகதி இரவு காரைநகர் பாலத்தடியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.