Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கூகுள் மேப்ஸில் ‘லேக் அமெரிக்கா’ – மீண்டும் ‘லேக் ஒன்டாரியோ’ பெயரை மீட்ட கனடா.

ஆகஸ்ட் 31, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கூகுள் மேப்ஸ் (Google Maps) நிறுவனத்தின் சமீபத்திய புதுப்பித்தலைத் தொடர்ந்து, ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தின் பல அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஒன்டாரியோ ஏரியானது லேக் அமெரிக்கா (Lake America) எனக் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் அரசியல் தளத்திலும் சமூகத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்துத் துரிதமாகச் செயல்பட்ட கனடிய அதிகாரிகள்,
வரைபடங்களில் மீண்டும் லேக் ஒன்டாரியோ (Lake Ontario) என்ற பழமையான பெயரையே மீட்டெடுத்துள்ளனர்.

மூன்றாம் தரப்பு வரைபடச் சேவைகளைப் (Third-party mapping services) பயன்படுத்தியதன் விளைவாகவே இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த அரசு
அதிகாரிகள், அனைத்து அரசு இணையதளங்களிலும் லேக் ஒன்டாரியோ என்ற சரியான பெயரே இடம் பெறுவதை உறுதிசெய்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவையும், அமெரிக்க புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பின் (GNIS) அதிகாரப்பூர்வ மாற்றத்தையும் தொடர்ந்து, அமெரிக்காவிலுள்ள பயனர்களுக்கு ஒன்டாரியோ ஏரியின் பெயர் லேக் அமெரிக்கா எனக் காண்பிக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.

கூகுள் மேப்ஸின் இந்தத் தானியங்கி மென்பொருள் மூலமான புதுப்பித்தற் செயற்பாடு காரணமாக, மெட்ரோலின்க்ஸ் (Metrolinx), ஹைட்ரோ ஒன் (Hydro One) மற்றும் எல்.சி.பி.ஓ (LCBO) உள்ளிட்ட ஒன்டாரியோ மாகாண நிறுவனங்களின் இணையதளங்களில் உள்ள வரைபடங்களில் ஏரியின் பெயர் தவறுதலாக லேக் அமெரிக்கா என மாறியது. இது குறித்து உடனடியாக விளக்கமளித்த ஒன்டாரியோவின் பொது மற்றும் வணிகச் சேவைகள் வழங்கல் அமைச்சர்,சில மாகாண அரசு
நிறுவனங்களின் இணையதளங்கள் கூகுள் மேப்ஸிலிருந்து நேரடியாகத் தரவுகளைப் பெறுகின்றன. கூகுளின் மாற்றத்தைத் தொடர்ந்து, எங்களது அனைத்து இணையதளங்களிலும் லேக் ஒன்டாரியோ என்ற சரியான பெயர் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரின் பின்னணியில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஏரியின் பெயரை
மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிக்குக் கனடாவில் பலத்த எதிர்ப்புப் கிளம்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, 400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த ஏரி, கனடியர்கள் மத்தியில் என்றும் லேக் ஒன்டாரியோ' என்றே அறியப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றாக விளங்கும் ஒன்டாரியோ ஏரியின் பெயர், கனடாரியோ (Kanadario – அழகிய நீர்நிலை) என்ற பழங்குடியின மொழியிலிருந்து  உருவானதாகும். சர்வதேச எல்லை நீர்நிலைகள் ஒப்பந்தத்தின் (Boundary Waters Treaty) கீழ்
இரு நாடுகளாலும் நிர்வகிக்கப்படும் இந்த ஏரியின் பெயரைத் தன்னிச்சையாக மாற்ற அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை என்றும், இத்தகைய பெயர்மற்றங்கள் கனடாவைக் கட்டுப்படுத்தாது என்றும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது மெட்ரோலின்க்ஸ் போன்ற முக்கிய அரசு அமைப்புகளின் தளங்களில் அந்த ஏரியின் பெயர் மாற்றப்பட்ட போதிலும், லோப்லாஸ் (Loblaws) போன்ற சில தனியார் வணிக நிறுவனங்களின் கிளை கண்டறியும் வரைபடங்களில் இன்னும் குறித்த ஏரியானது லேக் அமெரிக்கா என்றே காண்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கொள்கலனில் மறைத்து 463 கிலோ ஐஸ் கடத்தல் – மேலும் 3 பேர் கைது
அடுத்த செய்தி அபு தாபியில் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை கழுகு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் கைகோர்க்க வேண்டியது அவசியம்

பிப்ரவரி 26, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் கார்னி

ஜூலை 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மூலோபாய ரீதியாகப் பதிலளிக்க வேண்டும் – ஃபிராங்கோயிஸ் லெகால்ட்

நவம்பர் 11, 2025
உலகம்முதன்மை செய்தி

டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த தென் கொரியா….

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?