கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் ஒரு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேமியன் குரெக் தனது பதவியை விட்டு விலகவுள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாணத்தின் பேட்டில் ரிவர்-குரோஃபூட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டேமியன் குரெக் பதவி விலகுவதன் மூலம், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குரெக்கின் சுயநலமற்ற செயலுக்கு பொய்லியேவ் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்தத் தொகுதியின் மக்களின் நம்பிக்கையைப் பெற தான் கடுமையாக உழைக்கப்போவதாகவும் கூறினார். பியர் பொய்லியேவ் இதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கார்லெடன் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று நாடாளுமன்ற பொதுச்சபைக்கு பலதடவைகள் தெரிவாகியிருந்தார். எனினும், சில நாட்களின் முன்பு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அந்த தொகுதியில் அவர் தோல்வியடைந்தார்.
இந்நிலையிலேயே, இடைத்தேர்தல் ஒன்று நடைபெறும் சூழலை ஏற்படுத்தி, அத்தேர்தலில் வெற்றிபெற்றுவதன் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதே பியர் பொய்லியேவ்வின் திட்டமெனத் தெரியவருகின்றது.